செம்மண் கடத்த முயன்ற 4 பேர் கைது
செம்மண் கடத்த முயன்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர்
கீழப்பழுவூர்
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கோவிலூர் கிராமத்தில் இருந்து செம்மண் கடத்தப்படுவதாக அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில், திருமானூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையில் கோவிலூர் கிராமத்திற்கு போலீசார் விரைந்து சென்றனர். அப்போது 4 பேர் கொண்ட கும்பல், பொக்லைன் எந்திரம் உதவியுடன் செம்மண் அள்ளி அதனை 3 டிராக்டர்களில் ஏற்றி கடத்த முயன்றது தெரிய வந்தது. இதனையடுத்து அந்த 4 வாகனங்களையும் பறிமுதல் செய்த போலீசார், மணல் கடத்த முயன்ற கோவிலூர் கிராமத்தை சேர்ந்த சபரிவாசன் (வயது 20), ராஜதுரை (19), ஆண்டிபட்டக்காடு கிராமத்தை சேர்ந்த அன்பழகன் (51), சின்னபட்டாக்காடு கிராமத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் (52) ஆகிய 4 பேரை பிடித்தனர். இதுகுறித்து ஏலாக்குறிச்சி வருவாய் ஆய்வாளர் ராமசாமி, கிராம நிர்வாக அலுவலர் கண்ணதாசன் ஆகியோர் அளித்த புகாரின்பேரில் மேற்கண்ட 4 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.