வாலிபர் கைது

குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது

Update: 2021-05-26 20:30 GMT
சிவகங்கை
திருப்பாசேத்தி டி.வேலாங்குளத்தை சேர்ந்த குமார் என்பவரை முன்விரோதம் காரணமாக மானாமதுரையை சேர்ந்த வினோத்கண்ணன்(வயது 27) என்பவர் அரிவாளால் வெட்டினார்.. இது தொடர்பாக திருப்பாசேத்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவபாலன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து வினோத்கண்ணனை கைது செய்து சிறையில் அடைத்தனர். வினோத் கண்ணன் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் உள்ளன. இதனால் அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன் பரிந்துரை செய்தார். இதனை தொடர்ந்து அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் மதுசூதன் ரெட்டி உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்