அந்தியூர், சத்தியில் நடமாடும் வாகனங்களில் காய்கறிகள் விற்பனை
அந்தியூர், சத்தியமங்கலத்தில் நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஈரோடு
அந்தியூர், சத்தியமங்கலத்தில் வாகனங்கள் மூலம் நடமாடும் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அந்தியூர்
தமிழகத்தில் தளர்வில்லா முழு ஊரடங்கு அமலில் உள்ளதால் பொதுமக்களுக்கு காய்கறிகள் தடையின்றி கிடைக்க வாகனங்கள் மூலம் அந்தந்த பகுதிகளுக்கே சென்று விற்பனை செய்யப்படுகிறது.
இந்த நிலையில் அந்தியூர் பேரூராட்சிக்கு உள்பட்ட 18 வார்டு பகுதிகளிலும் காய்கறிகள் வாகனங்களில் கொண்டு சென்று விற்பனை செய்யப்படுகிறது. முன்னதாக இந்த விற்பனையை அந்தியூர் எம்.எல்.ஏ. ஏ.ஜி.வெங்கடாசலம் தொடங்கிவைத்தார். மேலும் விற்பவர்களிடம் கூடுதல் விலைக்கு விற்க கூடாது என்று அறிவுறுத்தினார்.
அப்போது அந்தியூர் பேரூராட்சி செயல் அதிகாரி ஹரிராமமூர்த்தி, சுகாதார ஆய்வாளர் குணசேகரன், மூர்த்தி, தி.மு.க. கிளை செயலாளர் ராஜராஜசோழன் ஆகியோர் உடன் இருந்தார்கள்.
சத்தியமங்கலம்
சத்தியமங்கலம் அருகே உள்ள திம்யன்புதூரில் சத்தி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் சார்பில் நடமாடும் காய்கறி விற்பனை நடைபெற்று வருகிறது. முன்னதாக இந்த விற்பனையை பவானிசாகர் எம்.எல்.ஏ. பண்ணாரி தொடங்கிவைத்தார். அப்போது சத்தி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் துணை தலைவர் வி.சி.வரதராஜ், பவானிசாகர் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் வி.ஏ.பழனிச்சாமி உள்பட பலர் உடன் இருந்தார்கள்.