கள் விற்ற 2 பேர் கைது

கள் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-05-26 19:35 GMT
மதுரை,மே
மதுரை அண்ணாநகர் போலீசார் வண்டியூர் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் சிலர் கள் விற்பனை செய்வதாக தகவல் வந்தது. இதைத் தொடர்ந்து அந்த வழியாக மொபட்டில் வந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர். இதில் அவர்கள் அண்ணாநகரை சேர்ந்த நரசிம்மன் (வயது 26), சேதுமாதவன் (48) என்பதும், அவர்கள் மொபட்டில் கள் கடத்தி சென்றதும் தெரியவந்தது. பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 2 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து மொபட், 2 செல்போன்கள் மற்றும் 35 லிட்டர் கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்