ஆர்ப்பாட்டம்

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2021-05-26 19:14 GMT
விருதுநகர், 
டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரியும் மாவட்டத்தில் 13 இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு  கட்சியினர் மற்றும் விவசாய சங்கத்தினர் கருப்புக் கொடியுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். சிவகாசி, விருதுநகர், ஆமத்தூர், ராஜபாளையம், கீழராஜகுலராமன், ஆர்.ஆர். நகர், சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ளிட்ட 13 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மேலும் செய்திகள்