ஒரேநாளில் 1,198 பேருக்கு கொரோனா

விருதுநகர் மாவட்டத்தில் ஒரேநாளில் 1,198 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் மேலும் 10 பேர் பலியாகினர்.

Update: 2021-05-26 18:38 GMT
விருதுநகர், 
விருதுநகர் மாவட்டத்தில் ஒரேநாளில் 1,198 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் மேலும் 10 பேர் பலியாகினர். 
பலி எண்ணிக்கை உயர்வு 
மாவட்டத்தில் மேலும் 1,198 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 34,033 ஆக உயர்ந்துள்ளது.
 26,682 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 6,991 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருவதோடு வீடுகளிலும் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். நோய் பாதிப்புக்கு மேலும் 10 பேர் பலியாகி உள்ள நிலையில் பலி எண்ணிக்கை 361 ஆக உயர்ந்துள்ளது.
பாதிப்பு 
மாவட்டத்தில் அரசு ஆஸ்பத்திரிகளில் 1,087 படுக்கைகள் உள்ள நிலையில் 989 படுக்கைகளில் நோய் பாதிக்கப்பட்டோர் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் 98 படுக்கைகள் மட்டுமே காலியாக உள்ளன. கொரோனாசிகிச்சை மையங்களில் 1,401 படுக்கைகள் உள்ள நிலையில் 910 படுக்கைகளில் பாதிக்கப்பட்டோர் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் 491 படுக்கைகள் காலியாக உள்ளன.
விருதுநகர் பட்டம் புதூர், மருளூத்து, அல்லம்பட்டி, சதானந்தபுரம், தாதம்பட்டி, வெள்ளூர், தெற்கு ரதவீதி, முத்துராமலிங்கநகர், எப்.எப். ரோடு, ெரயில்வே பீடர் ரோடு, அரசு ஆஸ்பத்திரி, சூலக்கரை மேடு, ரோசல்பட்டி, ராஜாஜி நகர், புல்லலக்கோட்டை, பாண்டியன் நகர், லட்சுமி நகர், கச்சேரி ரோடு, என்.ஜி.ஓ. காலனி, பர்மா காலனி, லட்சுமி நகர், பெத்தனாட்சி நகர், அய்யனார் நகர், கருப்பசாமி நகர் உள்ளிட்ட பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
நடவடிக்கை இல்லை 
 மேலும் அருப்புக்கோட்டை, பொம்மையாபுரம், கோவிலாங்குளம், பந்தல்குடி, செட்டிபட்டி, மிதிலை குளம், கல்லூரணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் பரவலாக நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 
நேற்று மாவட்ட சுகாதாரத்துறை 468 பேருக்கு பாதிப்பு உள்ளதாக தெரிவித்துள்ள நிலையில் மாநில பட்டியலில் 1,198 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான முரண்பாட்டுடன் தினசரி நோய் பாதிக்கப்பட்டோர் பட்டியல்கள் வெளியிடப்பட்டு வருவதால் மாவட்ட மக்களுக்கு நடப்பு கள நிலவரம் தெரிய வாய்ப்பில்லாமல் போய் விடுகிறது. ஆனாலும் மாவட்ட நிர்வாகம் முரண்பாடுகளை களைய எவ்வித நடவடிக்கையும்எடுத்ததாக தெரியவில்லை. தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் விருதுநகர் மாவட்டம் 8-வது இடத்தில் உள்ளது. 

மேலும் செய்திகள்