பெண் குளிப்பதை வீடியோ எடுத்த தனியார் நிறுவன ஊழியர் கைது

கோவை சாய்பாபாகாலனியில் பெண் குளிப்பதை வீடியோ எடுத்த தனியார் நிறுவன ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-05-26 18:37 GMT
கோவை

கோவை சாய்பாபாகாலனியில் பெண் குளிப்பதை வீடியோ எடுத்த தனியார் நிறுவன ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- 

குளிப்பதை வீடியோ எடுத்தார்

கோவை சாய்பாபா காலனி முத்துமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் 30 வயது பெண். இவர் தனது வீட்டு முன்பு உள்ள குளியல் அறையில் குளித்து கொண்டிருந்தார். 

அப்போது வெளியே யாரோ நிற்பதுபோன்ற சத்தம் கேட்டது. உடனே அந்த பெண், கதவு இடுக்கு வழியாக பார்த்தபோது, வாலிபர் ஒருவர் அங்கு நின்று அந்த பெண் குளிப்பதை தனது செல்போன் மூலம் வீடியோ எடுத்துக்கொண்டு இருந்தார். உடனே அதிர்ச்சி  அடைந்த அந்த பெண் கூச்சலிட்டார். 

போலீசார் விசாரணை 

இதையடுத்து அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடினார். உடனே அந்த பெண் நடந்த சம்பவத்தை தனது கணவரிடம் தெரிவித்தார். அத்துடன் இது குறித்து சாய்பாபாகாலனி போலீசில் புகார் செய்யப்பட்டது. 

அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். அதில் பெண் குளித்ததை செல்போன் மூலம் வீடியோ எடுத்தவர், அதேப்பகுதியை சேர்ந்த தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வரும் புவனேஸ்வரன் (24) என்பது தெரியவந்தது.

கைது 

இதைத்தொடர்ந்து போலீசார் புவனேஸ்வரனை கைது செய்து கோவை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்