110 பேரின் வாகனங்கள் பறிமுதல்
கோட்டூரில் ஊரடங்கு விதிகளை கடைபிடிக்காத 110 பேரின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கோட்டூர்;
கோட்டூரில் ஊரடங்கு விதிகளை கடைபிடிக்காத 110 பேரின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
பாதுகாப்பு பணி
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் ஊரடங்கை மீறி தேவையின்றி வெளியில் சுற்றித்திரிபவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன
கோட்டூர் பகுதியில் அனைத்துப் பகுதிகளிலும் மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் போலீசார் தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
110 வாகனங்கள் பறிமுதல்
போலீசாரின் தீவிர கண்காணிப்பு காரணமாக விக்கிரபாண்டியம், கோட்டூர், திருக்களார், களப்பால், பெருகவாழ்ந்தான், திருமக்கோட்டை ஆகிய போலீஸ் சரகங்களில் ஊரடங்கு விதிகளை மீறி தேவை இல்லாமல் சுற்றி் திரிந்தவர்களின் 110 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் முககவசம் அணியாமல் சென்ற 47 நபர்கள் மீதும் சமூக இடைவெளியைகடைபிடிக்காதவர்கள் 22பேர் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.