கத்தி முனையில் வாலிபரிடம் ரூ.50 ஆயிரம் வழிப்பறி

மேலூர் அருகே கத்திமுனையில் வாலிபரிடம் ரூ.50 ஆயிரத்தை பறித்துச் சென்ற கும்பலில் ஒருவர் சிக்கினார். கார் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2021-05-26 17:44 GMT
மேலூர்,மே.
மேலூர் அருகே கத்திமுனையில் வாலிபரிடம் ரூ.50 ஆயிரத்தை பறித்துச் சென்ற கும்பலில் ஒருவர் சிக்கினார். கார் பறிமுதல் செய்யப்பட்டது.
வழிமறித்தனர்
மதுரை செக்கானூரணி அருகில் உள்ள விளாத்தூரை சேர்ந்தவர் பிரபு. இவர் கடந்த 22-ந்தேதி மேலூர் அருகே கீழவளவு போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட சாத்தமங்கலம் கிராமத்தில் உள்ள தனது உறவினர் வீட்டுக்குச் சென்றார்.
இரவு நேரம் ஆகி விட்டதால் மறுநாள் அதிகாலையில் திரும்ப ஊருக்கு புறப்பட்டார். சாத்தமங்கலம் நடுப்பட்டி அய்யனார் கோவில் அருகே வந்தபோது பிரபுவை 4 பேர் வழிமறித்தனர்.
பின்னர் அவர்கள் கத்தியை காட்டி மிரட்டி பிரபு வைத்திருந்த ரூ.50 ஆயிரத்தை பறித்துச் சென்று விட்டனர். இது தொடர்பாக அவர் கீழவளவு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். 
ஒருவர் சிக்கினார்
போலீசார் விசாரணை நடத்தியதில் நடுப்பட்டியை சேர்ந்த நித்தியன், சுந்தரேசன், சாத்தமங்கலத்தை சேர்ந்த மனோஜ் மற்றும் பொன்முத்து ஆகிய 4 பேர் காரில் வந்து வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. 
இதையடுத்து நித்தியனை கைது செய்த போலீசார் அவர்கள் பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள மற்ற 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்