வேப்பூர் அருகே சாராயம் கடத்திய 4 பேர் கைது
வேப்பூர் அருகே சாராயம் கடத்திய 4 பேரை கைது போலீசார் செய்தனர்.
வேப்பூர்,
வேப்பூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரா, தனிப்பிரிவு ஏட்டு ராஜேஷ் மற்றும் போலீசார் நேற்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆதியூர் கொளப்பாக்கம் சாலையில் 2 மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேரை பிடித்து விசாரித்தனர்.
அதில் அவர்கள், இலங்கியனூர் கிராமத்தை சேர்ந்த அர்ச்சுனன் மகன் வேல்முருகன் (வயது 38), சுப்பிரமணியன் மகன் சரத்குமார் (28), நல்லூர் கிராமத்தை சேர்ந்த கோவிந்தராஜ் மகன் மைக்கேல் (32), முனியமுத்து மகன் ராதாகிருஷ்ணன் (38) என்பது தெரியவந்தது.
மேலும் அவர்கள் எடுத்து வந்த சாக்குமூட்டையை சோதனை செய்த போது, அதில் கேன்களில் 40 லிட்டர் சாராயத்தை கடத்தி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து 4 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து மோட்டர் சைக்கிள், 40 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.