கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு முகாம்

கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு முகாம் நடந்தது.

Update: 2021-05-26 16:58 GMT
கீழக்கரை, 
கீழக்கரையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நவாஸ்கனி எம்.பி. மற்றும் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. ஆகியோர் அனைத்து தெருக்களிலும் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்த வலியுறுத்தினர். அதன்பேரில் பி.எஸ்.எம். மருத்துவமனை மற்றும் சுகாதாரத்துறை இணைந்து நடத்திய கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமில் 124 பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டனர். இதேபோல் அனைத்து தெருக்களிலும் தடுப்பூசி செலுத்தபட உள்ளதாக வட்டார மருத்துவர் டாக்டர் ராசிக்தீன் தெரிவித்துள்ளார். இதுவரையிலும் கீழக்கரையில் 2 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். முகாமில் 75 வயதுக்கு மேற்பட்டோர் ஆர்வத்துடன் வந்து தடுப்பூசி போட்டனர்.முகாமுக்கு வட்டார மருத்துவர் ராசிக்தீன், இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், நகராட்சி பொறுப்பு ஆணையாளர் பூபதி தாசில்தார் முருகேசன், ஆகியோர் தலைமை தாங்கினர்.தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் வக்கீல் ஹமீது சுல்தான் முன்னிலை வகித்தார். இளைஞர் அணி துணை அமைப்பாளர் நயீம், உறுப்பினர் அஸ்மத் உசேன் மற்றும் நுகர்வோர் சங்க செயலாளர் செய்யது இப்ராகிம், பி.எஸ்.எம். மருத்துவமனை மேலாளர் அகமது பிலால், ஹாமிது இபுராகிம், பவுசுல் அமீன், மரைக்கா மற்றும் செவிலியர்கள், உதவியாளர்கள் கலந்துகொண்டனர். கீழக்கரை கிழக்கு தெரு ஜமாத் கைராத்துல் ஜலாலியா மேல்நிலை பள்ளியிலும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

மேலும் செய்திகள்