நீலகிரியில் கொரோனாவுக்கு 2 பேர் பலி
நீலகிரியில் கொரோனாவுக்கு 2 பேர் பலியானார்கள்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 16 ஆயிரத்து 126 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் புதிதாக 422 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதியாகி உள்ளது. இதனால் நீலகிரியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 16 ஆயிரத்து 550 ஆக உயர்ந்து உள்ளது.
இதுதவிர 341 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை 13 ஆயிரத்து 389 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர். கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 2 பேர் நேற்று உயிரிழந்தனர். இதனால் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 75-ஆக உயர்ந்துள்ளது. தற்போது 3 ஆயிரத்து 86 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நீலகிரியில் மொத்தம் 356 ஆக்சிஜன் படுக்கைகளில் 350 படுக்கைகள் நிரம்பி உள்ளது. 6 படுக்கைகள் மட்டும் காலியாக உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.