ராமநாதபுரம்,
கொரோனா பரவலை தடுக்க தளர்வில்லா முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் நகரில் துணை போலீஸ் சூப்பிரண்டு வெள்ளைத்துரை தலைமையில் போலீசார் தீவிர ரோந்து சுற்றி ஊரடங்கு விதிகளை மீறியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அபராதம் வசூலித்தனர். இவ்வாறு செல்போனில் பேசிக்கொண்டு கவனக்குறைவாக சென்ற 3 பேர் மீதும், தலைக்கவசம் அணியாமல் சென்றதாக 133 பேர் மீதும், இதர பிரிவுகளின் படி 36 பேர் மீதும் வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது. ராமநாதபுரம் நகரில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் முககவசம் அணியாமல் சென்றதாக 22 பேர் மீதும், சமூக இடைவெளியை பின்பற்றாத 5 பேர் மீதும் வழக்குபதிவு செய்யப்பட்டு அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, முழு ஊரடங்கின் போது தேவையின்றி அரசின் உத்தரவினை மீறி சாலைகளில் சுற்றி திரிந்த 11 பேரின் மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.