தென் மாவட்ட ரெயில்கள் வருகிற 15ந்தேதி வரை ரத்து

தென் மாவட்ட ரெயில்கள் வருகிற 15ந்தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளன.

Update: 2021-05-26 16:20 GMT
மதுரை, மே
கொரோனா தொற்று பரவலால், ரெயில்களில் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. அதனைத் தொடர்ந்து, மதுரை கோட்டத்தில் 20 சதவீதத்துக்கும் குறைவான பயணிகள் செல்லும் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன. அதன் படி, தென் மாவட்டங்களை சேர்ந்த சில ரெயில்கள் வருகிற 31-ந்தேதி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், அந்த ரெயில்கள் அனைத்தும் அடுத்த மாதம் 15-ந் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.
அதாவது, திருவனந்தபுரத்தில் இருந்து பாலக்காடு, பொள்ளாச்சி, பழனி வழியாக மதுரை வரை இயக்கப்படும் அம்ரிதா சிறப்பு ரெயில் அடுத்த மாதம் 15-ந் தேதி வரையிலும், மறுமார்க்கத்தில் மதுரையில் இருந்து திருவனந்தபுரம் வரை இயக்கப்படும் ரெயில் வருகிற 16-ந் தேதி வரையும் ரத்து செய்யப்படுகிறது. சென்னையில் இருந்து மதுரை வழியாக திருச்செந்தூர் வரை இயக்கப்படும் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 15-ந் தேதி வரையிலும், திருச்செந்தூரில் இருந்து சென்னை வரை இயக்கப்படும் ரெயில் வருகிற 16-ந்தேதி வரையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்