காந்திராஜன் எம்.எல்.ஏ. திடீர் ஆய்வு
வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் காந்திராஜன் எம்.எல்.ஏ. திடீர் ஆய்வு செய்தார்.
திண்டுக்கல் :
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் காந்திராஜன் எம்.எல்.ஏ. நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது கொரோனா நோயாளிகளுக்கு முறையாக சிகிச்சை அளிக்கப்படுகிறதா? நோயாளிகளுக்கு தரமான உணவு வழங்கப்படுகிறதா? என்பது குறித்து டாக்டர்களிடம் அவர் கேட்டறிந்தார்.
மேலும் அவசர சிகிச்சைக்காக தயார் நிலையில் உள்ள மருத்துவ வசதிகள் குறித்தும் காந்திராஜன் எம்.எல்.ஏ. பார்வையிட்டார்.
இந்த ஆய்வின்போது வேடசந்தூர் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் வீராசாமிநாதன், வடக்கு ஒன்றிய செயலாளர் கவிதாபார்த்திபன், நகர செயலாளர் கார்த்திகேயன், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் பிரியம் எஸ்.நடராஜன், முன்னாள் மாவட்ட துணைச்செயலாளர் ஜீவா மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் உடனிருந்தனர்.
பின்னர் வேடசந்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தொகுதி அளவிலான கொரோனா தொற்று ஒழிப்பு குறித்த கலந்தாய்வு கூட்டம் நடந்தது. இதில் காந்திராஜன் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு பேசினார்.
இந்த கூட்டத்தில் போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ், தாசில்தார் சக்திவேலன் மற்றும் அரசு அதிகாரிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.