டாஸ்மாக் கடையை உடைத்து கொள்ளை முயற்சி

வாடிப்பட்டி அருகே டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற மர்ம கும்பல் போலீசார் வருவதைப் பார்த்து தப்பி ஓடிவிட்டனர்.

Update: 2021-05-26 16:16 GMT
வாடிப்பட்டி,மே.
வாடிப்பட்டி அருகே டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற மர்ம கும்பல் போலீசார் வருவதைப் பார்த்து தப்பி ஓடிவிட்டனர்.
டாஸ்மாக் கடை
வாடிப்பட்டி அருகே தாதம்பட்டி ஜவுளி பூங்காவின் பின்புறம் ஆண்டிப்பட்டி கச்சைக்கட்டி சாலையில் டாஸ்மாக் கடை உள்ளது. முழு ஊரடங்கு காரணமாக டாஸ்மாக் கடை பூட்டப்பட்டு கிடந்தது.
இந்த நிலையில் நேற்று முன் தினம் நள்ளிரவில் மர்ம கும்பல் ஒன்று கடையின் முன் புறம் உள்ள இரும்புக் கதவின் பூட்டையும், அதற்கு உள்ளே இருந்த ஷட்டர் போட்ட கதவின் பூட்டையும் உடைத்து ஷட்டரை திறந்து உள்ளே புகுந்தனர். பின்னர் கடைக்குள் இருந்த 24 மதுபாட்டில் பெட்டிகளில் 21 பெட்டிகளை எடுத்து கடையின் வெளியே வைத்துக் கொண்டிருந்தனர்.
தப்பிஓடினர்
அப்போது அந்த வழியாக வாடிப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கேசவ ராமச்சந்திரன், ஏட்டுகள் சுப்பையா, பாண்டியராஜன் ஆகியோர் ரோந்து சென்றனர். போலீசாரை பார்த்ததும் செய்வதறியாது திகைத்து போன அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி இருட்டுக்குள் சென்று மறைந்து விட்டனர்.
இது தொடர்பாக வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சில்வியா ஜாஸ்மின் வழக்குப் பதிவு செய்து தப்பி ஓடிய மர்ம கும்பலை வலைவீசி தேடி வருகிறார்.

மேலும் செய்திகள்