1,880 பேருக்கு கொரோனா
திருப்பூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 1,880 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. சிகிச்சை பலனின்றி 7 பெண்கள் உள்பட 15 பேர் பலியாகினர்
திருப்பூர்
திருப்பூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 1,880 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. சிகிச்சை பலனின்றி 7 பெண்கள் உள்பட 15 பேர் பலியாகினர்.
1,880 பேருக்கு கொரோனா
இந்தியா முழுவதும் கொரோனா 2வது அலை அதிதீவிரமாகி வருகிறது. நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை அடைந்து வருகிறது. அனைத்து மாநிலங்களிலும் கணிசமான அளவிற்கு பாதிப்பு இருந்து வருகிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பில் தற்போது தமிழகம் முதலிடத்தில் இருந்து வருகிறது.
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தொடர்ந்து பாதிப்பு ஏறுமுகமாக இருந்து வருவதால், பலரும் அச்சமடைந்து வருகிறார்கள். குறிப்பாக சென்னை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா கோர தாண்டவம் ஆடி வருகிறது. இந்நிலையில் நேற்று ஒரே நாளில் தமிழகத்தில் 33 ஆயிரத்து 764 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் திருப்பூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 1,880 பேருக்கு உறுதி செய்யப்பட்டது. இவர்கள் அனைவரும் திருப்பூர் மற்றும் கோவையில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுபோல் இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொரோனா பரிசோதனை முடிவுகள் வரும் வரை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
15 பேர் பலி
இதுபோல் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற 767 பேர் குணமடைந்தனர். தற்போது மாவட்டத்தில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 37 ஆயிரத்து 150ஆக உயர்ந்துள்ளது. இதுபோல் மாவட்டத்தில் 14 ஆயிரத்து 909 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்நிலையில் மாவட்டத்தில் ஏற்கனவே பலி எண்ணிக்கை அதிகமாக இருந்த நிலையில் நேற்று ஒரே நாளில் திருப்பூரை சேர்ந்த 7 பெண்கள் மற்றும் 8 ஆண்கள் என 15 பேர் சிகிச்சை பலனின்றி பலியாகினர். தற்போது மாவட்டத்தில் பலி எண்ணிக்கை 379ஆக உள்ளது.
------
----
Reporter : S.Thiraviya Raja Location : Tirupur - Tirupur