15 பேர் கொரோனாவுக்கு பலி

தேனி மாவட்டத்தில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 15 பேர் பலியானார்கள்.

Update: 2021-05-26 15:04 GMT
தேனி:
 
15 பேர் பலி 

தேனி மாவட்டத்தில் கொரோனா 2-வது அலை தொடர்ந்து கடும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. நோய் கட்டுப்பாட்டு பகுதிகளிலும், கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு வெளியிலும் தினமும் பலர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழப்பும் உயர்ந்து வருகிறது.

கொரோனா பாதிப்புடன் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஓடைப்பட்டியை சேர்ந்த 60 வயது மூதாட்டி, சின்னமனூரை சேர்ந்த 70 வயது மூதாட்டி, போடியை சேர்ந்த 63 வயது மூதாட்டி, பெரியகுளத்தை சேர்ந்த 50 வயது பெண், கம்பத்தை சேர்ந்த 50 வயது பெண், குச்சனூரை சேர்ந்த 55 வயது பெண், மல்லிங்காபுரத்தை சேர்ந்த 60 வயது மூதாட்டி, திருமலாபுரத்தை சேர்ந்த 61 வயது முதியவர், பெரியகுளத்தை சேர்ந்த 54 வயது ஆண் ஆகியோர் உள்பட 15 பேர் நேற்று ஒரே நாளில் உயிரிழந்தனர். இதனால் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 325 ஆக உயர்ந்தது.

530 பேருக்கு தொற்று

இதற்கிடையே மாவட்டத்தில் நேற்று 530 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் மாவட்டத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 33 ஆயிரத்து 645 ஆக உயர்ந்தது. பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்தவர்களில் 249 பேர் நேற்று குணமாகினர்.

தற்போது சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்து 666 ஆக அதிகரித்துள்ளது. அவர்களில் 615 பேர் செயற்கை ஆக்சிஜன் சுவாசத்துடனும், 61 பேர் தீவிர சிகிச்சை பிரிவிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
------------ 

மேலும் செய்திகள்