கருப்பு கொடி கட்டி போராட்டம்

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி கடத்தூர் பகுதியில் கம்யூனிஸ்டு கட்சியினர் தங்களது வீடுகளில் கருப்பு கொடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-05-26 13:27 GMT
மடத்துக்குளம்
மத்திய அரசு கொண்டு வந்துள்ள  3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி கடத்தூர் பகுதியில் கம்யூனிஸ்டு கட்சியினர் தங்களது வீடுகளில் கருப்பு கொடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேளாண் சட்டங்கள் 
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி கடத்தூர் பகுதியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் வீடுகளில் கருப்பு கொடி கட்டி போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் குறித்து போராட்டத்தில் ஈடுபட்ட கம்யூனிஸ்டு கட்சியினர் கூறியதாவது
 விவசாயிகளையும், விவசாயத்தையும், கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு, தாரை வார்க்கும் மூன்று விவசாய விரோத சட்டங்களுக்கு எதிராகவும், விவசாய விளை பொருளுக்கு குறைந்தபட்ச விலை உத்தரவாதம் கோரியும், மின்சார திருத்த மசோதாவை கைவிட கோரியும், டெல்லியில் விவசாயிகள் போராட்டங்களை தொடங்கி ஆறு மாத காலம் முடிவடைகிறது. கொட்டும் பனியிலும், கடும் வெயிலிலும், போராடி வந்த விவசாயிகள், தற்போது கொட்டும் மழையிலும் இடைவிடாது போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
இதுவரை போராட்டக் களத்தில் 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிர்த்தியாகம் செய்துள்ளனர். இந்தியாவில் தற்போது கொத்துக்கொத்தாக கொரோனா நோய் தாக்குதலுக்கு, மக்கள் உயிரிழந்து வரும் நிலையில், உயிர் காக்கும் மருந்துகளை தயாரிக்கவும், அதிக லாபம் சம்பாதிக்கவும், கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி வருகிறது.
போராட்டம்
மேலும் பெட்ரோல் டீசல் விலைகளை உயர்த்தி, மக்களை நசுக்கி வருகிறது. சொந்த நாட்டு விவசாயிகளை போராட விட்டு, மக்களின் உயிர்களை பற்றி கவலை கொள்ளாமல் மோடி தலைமையிலான அரசு வேடிக்கை பார்த்து வருகிறது. அகில இந்திய விவசாயிகள் போராட்டத்தை கண்டு கொள்ளாத மத்திய அரசை கண்டித்து   இன்றைய தினத்தை நேற்று கறுப்பு தினமாக விவாயிகள் சங்கம் அறிவித்துள்ளது. அதன்படி  உள்ள கடத்தூர் ஊராட்சி பகுதியில், விவசாய சங்கத்திற்கு ஆதரவாக தங்களது வீடுகளில் கருப்புக்கொடி ஏந்தியும், கருப்புக் கொடியை கையில் பிடித்தவாறு வீட்டின் முன்பு நின்று சிறிது நேரம், தங்களது எதிர்ப்பை பதிவு செய்தோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்