போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு

போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு

Update: 2021-05-26 13:04 GMT
உடுமலை
 திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திஷாமித்தல் நேற்று உடுமலைக்கு வந்திருந்தார். அவர் உடுமலை மத்திய பஸ்நிலையம் பகுதி, ரவுண்டானா பகுதி, பழைய பஸ்நிலையம் பகுதி, தளிசாலை உள்பட பல்வேறு இடங்களில், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்ததை ஆய்வு செய்தார். அத்துடன் அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசாருக்கு பிஸ்கெட் மற்றும் குளிர்பானம் ஆகியவற்றை வழங்கினார். 
இதேபோன்று ஒன்பதாறு சோதனைசாவடி, அமராவதிநகர் ஆகிய இடங்களிலும் பாதுகாப்பு பணிகளை பார்வையிட்ட போலீஸ் சூப்பிரண்டு போலீசாருக்கு பிஸ்கெட் மற்றும் குளிர்பானம் ஆகியவற்றை வழங்கினார்.

மேலும் செய்திகள்