நர்சிங் படித்து விட்டு மருத்துவம் பார்த்த போலி டாக்டர் கைது
போலி டாக்டர் கைது
ஏற்காடு:
சேலம் 5 ரோடு பகுதியை சேர்ந்தவர் அனிதா (வயது 59). இவர் நர்சிங் கோர்ஸ் படித்து விட்டு, ஏற்காடு பிளியூர் கிராமத்தில் தன்னை டாக்டர் என்று கூறி கடந்த 10 ஆண்டுகளாக சிகிச்சை அளித்து வந்துள்ளார். இது குறித்த தகவல் அறிந்த ஏற்காடு தாசில்தார் பொன்னுசாமி, கிராம நிர்வாக அலுவலர் சரவணன் மற்றும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாதையன் ஆகியோர் பிளியூர் கிராமத்துக்கு சென்று அவரை மடக்கி பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் நர்சிங் படித்து விட்டு, டாக்டர் என்று கூறி பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்ததை ஒப்புக்கொண்டார். இதைத்தொடர்ந்து அவரிடம் இருந்து ரூ.50 ஆயிரம் மதிப்பிலான மருந்து, மாத்திரைகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் கைப்பற்றப்பட்டன. ெதாடர்ந்து ஏற்காடு போலீசார் நர்சிங் கோர்ஸ் படித்து விட்டு மருத்துவம் பார்த்த போலி டாக்டர் அனிதாவை கைது செய்தனர். கைதான அனிதாவின் சொந்த ஊர் கேரள மாநிலம் பாலக்காடு ஆகும்.