வாழப்பாடி:
பேளூர் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், வாழப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், ஆட்டோ, டாக்சி டிரைவர்கள், மளிகை, ஜவுளி உள்ளிட்ட அனைத்து கடைகள் மற்றும் உணவக பணியாளர்களுக்கான கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. வட்டார மருத்துவ அலுவலர் சி.பொன்னம்பலம் தலைமையிலான மருத்துவ குழுவினர், 100-க்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தினர்.
முகாமில் தாசில்தார் மாணிக்கம், போலீஸ் துணை சூப்பிரண்டு வேலுமணி, வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில், தி.மு.க. ஒன்றிய செயலாளர் சக்கரவர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் சுகாதார ஆய்வாளர் செல்வபாபு நன்றி கூறினார்.