மானாமதுரையில் கொரோனா தடுப்பூசி போட பொதுமக்கள் ஆர்வம்

மானாமதுரையில் கொரோனா தடுப்பூசி போட பொதுமக்கள் ஆர்வம் காட்டினர்.

Update: 2021-05-25 20:29 GMT
மானாமதுரை,

மானாமதுரை பேரூராட்சி மற்றும் தனியார் திருமண மண்டபத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. இதில் 18 வயதுக்கு மேல் 45 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. முகாமை கலால்துறை உதவி ஆணையர் சிந்துஜா தொடங்கி வைத்தார். இதில் தாசில்தார் மாணிக்கவாசகம், பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் தங்கதுரை ஆகியோர் உடன் இருந்தனர்.
18 வயதுக்கு மேற்பட்ட இளைஞர்கள் பலர் ஆர்வத்துடன் வந்து தடுப்பூசி போட்டு கொண்டனர். நேற்று ஒரே நாளில் 183 பேர் தடுப்பூசி போட்டு கொண்டனர்.

மேலும் செய்திகள்