பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் நியமனம்
கொரோனா தடுப்பு பணிக்கு பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளார்கள். இதற்கு ஆர்வமுள்ளவர்கள் 31-ந்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
சிவகங்கை,
சிவகங்கை மாவட்டத்தில் கொரோனோ நோய்த்தொற்றின் 2-வது அலை மிக வேகமாக பரவி வருவதால் நோய்த்தொற்றினை தடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகளில் 40 பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் மற்றும் ஆய்வக நுட்புனர் 4 பேர், தேவைப்படும் செவிலியர்கள் ஆகிய பணிநிலைகளில் தற்காலிகமாக பணிபுரிவதற்கு தகுதியுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணிகள் முற்றிலும் தற்காலிகமானது.
பணிபுரிய ஆர்வமுள்ள, விருப்பமுள்ளவர்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் அலுவலகம், சிவகங்கை என்ற முகவரிக்கு தபால் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ உரிய தகுதிச் சான்றிதழ் நகல்களுடன் வருகிற 31.5.2021-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அதற்கு பின்னர் வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.