காரைக்குடியில் ரேஷன் பொருட்கள் வாங்க காலையிலேயே காத்திருந்த பொதுமக்கள்

காரைக்குடியில் ரேஷன் பொருட்கள் வாங்க காலையிலேயே பொதுமக்கள் காத்திருந்தனர்.

Update: 2021-05-25 20:00 GMT
காரைக்குடி,

காரைக்குடியில் ரேஷன் பொருட்கள் வாங்க காலையிலேயே பொதுமக்கள் காத்திருந்தனர்.

ஊரடங்கு

தமிழகத்தில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து நேற்று முன்தினம் முதல் ஒரு வார காலத்திற்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் ஊரடங்கு காலக்கட்டத்தில் பொதுமக்களுக்கு கொரோனா நிவாரண நிதியை முதற்கட்டமாக ரூ.2 ஆயிரம் அந்தந்த பகுதியில் உள்ள ரேஷன்கடைகளில் வழங்கப்பட்டது.
ஊரடங்கில் பொதுமக்கள் ரேஷன் பொருட்கள் வாங்குவதற்காக நேற்று  காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை ரேஷன் கடை திறக்க அரசு அறிவித்தது. அதன்படி நேற்று ரேஷன் கடைகள் திறக்கப்பட்டன.

காலையிலேயே காத்திருந்த பொதுமக்கள்

காரைக்குடி அண்ணா நகர் ரேஷன் கடைக்கு நேற்று காலை 7 மணிக்கே பொதுமக்கள் பொருட்கள் வாங்க காத்திருந்தனர். பூட்்டிய கடை முன்பு சமூக இடைவெளி விட்டு காத்திருந்தனர். காலை 8 மணிக்கு கடை திறந்த பிறகு அரிசி, சர்க்கரை, மண்எண்ெணய் உள்ளிட்ட பொருட்களை வாங்கி சென்றனர்.
இதே போல மாவட்டம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகள் காலை 8 மணிக்கு திறக்கப்பட்டு பகல் 12 மணி வரை பொதுமக்களுக்கு பொருட்கள் வினியோகிக்கப்பட்டது. பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றி பொருட்கள் வாங்கி சென்றனர்.


மேலும் செய்திகள்