போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது
போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.;
கடையம்:
கடையம் அருகே உள்ள தெற்கு மடத்தூர் நடுத்தெருவைச் சேர்ந்தவர் முருகன் மகன் சரத்குமார் (வயது 25). கூலித்தொழிலாளியான இவர் ஒரு கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமியை அழைத்து சென்று திருமணம் செய்ததாகவும், பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து கடையம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில், ஆலங்குளம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அங்கையற்கண்ணி, போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, சரத்குமாரை கைது செய்தார்.