திசையன்விளை பகுதியில் கொரோனா தடுப்பு பணிகளை சபாநாயகர் அப்பாவு ஆய்வு

திசையன்விளை பகுதியில் கொரோனா தடுப்பு பணிகளை சபாநாயகர் அப்பாவு ஆய்வு செய்தார்.

Update: 2021-05-25 19:04 GMT
திசையன்விளை:
திசையன்விளை பகுதியில் கொரோனா தடுப்பு பணிகளை சபாநாயகர் அப்பாவு ஆய்வு செய்தார். 

சபாநாயகர் ஆய்வு

திசையன்விளை சுற்றுவட்டார பகுதிகளில் கொரோனா தொற்று பரவல் தடுப்பு பணிகளை சபாநாயகர் அப்பாவு நேற்று ஆய்வு செய்தார். 
திசையன்விளை பஸ் நிலையத்தில் தீயணைப்பு வாகனம் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணி, திசையன்விளை, இடையன்குடி, உவரியில் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு  கொரோனா தடுப்பூசி போடும் பணி ஆகியவற்றை அவர் தொடங்கி வைத்தார். 

கொரோனா சிகிச்சை மையம்

அப்போது அந்த பகுதியில் கபசுர குடிநீர் வழங்கிய சமூக சேவகர் லைசாள் என்பவரை பாராட்டினார். முன்னதாக மன்னார்புரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் அமைக்கப்பட்டு வரும் கொரோனா சிகிச்சை மையத்தையும் அவர் பார்வையிட்டார். 
இந்த ஆய்வின்போது நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு, சேரன்மாதேவி உதவி கலெக்டர் பிரதிக் தயாள், திசையன்விளை தாசில்தார் ரகுமத்துல்லா, நகர பஞ்சாயத்து செயல் அலுவலர் பாலசுப்பிரமணியன், சுகாதார ஆய்வாளர் எட்வின், ராதாபுரம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆதரவற்ற முதியவருக்கு உதவி

முன்னதாக திசையன்விளைக்கு வந்த சபாநாயகர் அப்பாவு, அங்கு பஸ் நிலையத்தில் இருந்த ஆதரவற்ற முதியவர் ஒருவரை பார்த்தார். நடக்க முடியாத நிலையில் இருந்த அவரது பெயர் ஜெயராஜ். திசையன்விளை அருகே உள்ள பூச்சிக்காட்டை சேர்ந்தவர். அவர் யாசகம் பெற்று வாழ்ந்து வந்தார்.

அவரிடம் சென்று சபாநாயகர் அப்பாவு கனிவுடன் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் அவருக்கு உதவித்தொகை வழங்கினார். மேலும் அவருக்கு தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யும்படி அருகில் இருந்த கலெக்டர் விஷ்ணுவிடம் தெரிவித்தார்.

வள்ளியூர்

மேலும் வள்ளியூர் அருகே உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் கொரோனா நோயாளிகளுக்கான சிறப்பு வார்டு 200 படுக்கைகள் மற்றும் கட்டமைப்பு வசதிகளுடன் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதனை சபாநாயகர் அப்பாவு, நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு ஆகியோர் பார்வையிட்டனர். 

இதில் வள்ளியூர் உதவி சூப்பிரண்டு சமய்சிங் மீனா, ராதாபுரம் தாசில்தார் கனகராஜ், வள்ளியூர் யூனியன் ஆணையாளர் லயலோ ஆரோக்கிய தாஸ், வட்டார வளர்ச்சி அலுவலர் பிச்சையா, வட்டார சுகாதார மருத்துவர் கோலப்பன், டாக்டர் தேவ்மகிபன், ராதாபுரம் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஜோசப்பெல்சி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்