சோமரசம்பேட்டை,
ராம்ஜிநகர் அருகே உள்ள பூங்குடியை சேர்ந்தவர் கண்ணன் (வயது 55). இவர் திருவிழா நேரங்களில் வாணவெடி வைக்கும் தொழில் செய்து வருகிறார். சென்ற முறை திருவிழாவிற்கு வாங்கிய வாணவெடியில் மீதம் இருந்த 18 வாணவெடியை வீட்டின் அருகில் உள்ள தோட்ட கழிவறையில் வைத்துள்ளார்.
நேற்று முன்தினம் திடீரென அந்த வாணவெடிகள் வெப்பம் தாங்காமல் வெடித்து சிதறின. அதிலிருந்து கிளம்பிய வாணவெடி ஒன்று ஆடு கட்டும் பட்டியில் பட்டு தீப்பிடித்து எறிந்தது. அங்கிருந்தவர்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். இதுபற்றி தகவல் அறிந்த ராம்ஜிநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றுவிசாரணை நடத்தினர்.