வேலூர் மாவட்டத்தில் ெகாரோனாவுக்கு 5 பேர் பலி
வேலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 5 பேர் பலியானார்கள். ஒரே நாளில் 611 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வேலூர்
வேலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 5 பேர் பலியானார்கள். ஒரே நாளில் 611 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
611 பேருக்கு கொரோனா
வேலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவல் தினமும் அதிகரித்து கொண்டே செல்கிறது. தொற்றை கட்டுக்குள் கொண்டு வர பல்வேறு நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் 375 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். நேற்றைய பரிசோதனைகளின் முடிவில் மேலும் 611 பேருக்கு தொற்று உறுதியானது.
வேலூர் மாநகராட்சி பகுதியில் 300-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கிராமப்புற பகுதிகளிலும் கொரோனா வேகமாக பரவி வருகிறது.
5 பேர் பலி
இந்த நிைலயில் நேற்று வேலூர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 5 பேர் உயிரிழந்தனர்.
இதையடுத்து பலியானவர்களின் எண்ணிக்கை 646 ஆக உயர்ந்தது.
வேலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை கொரோனாவினால் 39 ஆயிரத்து 126 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் 34 ஆயிரத்து 213 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். தற்போது 4 ஆயிரத்து 271 பேர் அரசு, தனியார் மருத்துவமனைகள், வீடுகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தளர்வுகள் இல்லாத முழுஊரடங்கை கடைப்பிடித்தால் கொரோனா பரவலை முழுமையாக கட்டுப்படுத்தலாம்.
தேவையின்றி பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். 18 வயதுக்கு மேற்பட்டோர் அருகே நடைபெறும் முகாம் அல்லது அரசு மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.