கிணத்துக்கடவு அருகே காய்ந்த புற்களில் தீப்பிடித்தது
கிணத்துக்கடவு அருகே காய்ந்த புற்களில் தீப்பிடித்தது
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவு பகுதியை சேர்ந்தவர் பூபதிராஜ். இவருக்கு சொந்த மான விவசாய நிலம் கிணத்துக்கடவு அருகே உள்ள மீனாட்சி அவென்யூ குடியிருப்பு பகுதியில் உள்ளது.
அந்த நிலத்தில் புற்கள் அடர்த்தியாக வளர்ந்து இருந்தன. இந்த நிலையில் அதில் காய்ந்து இருந்த புற்களில் திடீரென்று தீப்பிடித்தது. மேலும் காற்று பலமாக வீசியதால் அந்த தீ கொழுந்துவிட்டு எரிந்தது.
இது குறித்து அந்தப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கிணத்துக்கடவு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து தாசில்தார் சசிரேகா, கிராம நிர்வாக அதிகாரிகள் கேசவமூர்த்தி, ம து கண்ணன், விமல் மாதவன் மற்றும் வருவாய்த்துறையினரும், தீயணைப்பு நிலைய அதிகாரி காளிமுத்து தலைமையில் தீயணைப்புத் துறையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
பின்னர் அவர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். காய்ந்த புற்களில் தீ எப்படி பிடித்தது என்பது தெரியவில்லை. இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.