371 மூத்த குடிமக்களுக்கு போலீசார் உதவி

371 மூத்த குடிமக்களுக்கு போலீசார் உதவி

Update: 2021-05-25 18:10 GMT
கோவை

கோவை நகரில் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் 371 பேர் தனியாக வசிக்கிறார்கள். அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுக்குமாறு மாநகர போலீஸ் கமிஷனர் தீபக் தாமோர் உத்தரவிட்டார்.

 இதைத்தொடர்ந்து 371 மூத்த குடிமக்களின் வீடுகளுக்கே சென்று அவர் களுக்கு தேவையான உணவு மற்றும் உதவி பொருட்களை வழங்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். 

இது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறும்போது, வீட்டில் தனியாக வசிக்கும் 371 மூத்த குடிமக்களின் பட்டியல் சேகரிக்கப்பட்டு அந்தந்த பகுதி போலீஸ் நிலையங்களுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. ஊரடங்கு காலத்தில் அவர்களுக்கு உரிய உதவிகள் செய்யப்பட்டு வருகிறது என்றனர்.

மேலும் செய்திகள்