தடுப்பூசி மையம் பூட்டிக்கிடப்பதால் பொதுமக்கள் ஏமாற்றம்
தடுப்பூசி மையம் பூட்டிக்கிடப்பதால் பொதுமக்கள் ஏமாற்றம்;
கணபதி
கொரோனா தொற்று பரவலை தடுக்க அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி வருகிறது.
இதற்காக ஆங்காங்கே தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. அங்கு பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
அந்த வகையில் கோவை கணபதி மணியக்காரம்பாளையம் மாநக ராட்சி பள்ளியில் தடுப்பூசி மையம் அமைக்கப்பட்டு ஒரு வாரம் ஆகிறது. ஆனால் ஒரே ஒருநாள் மட்டுமே செயல்பட்டது.
அன்று மட்டும் 700 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. அதன்பிறகு தடுப்பூசி மையம் செயல்பட வில்லை. ஆனாலும் அந்த மையத்துக்கு தடுப்பூசி போடுவதற்காக வரும் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
இந்த நிலையில் மணியக்காரம்பாளையம் தடுப்பூசி மையத்தில், தடுப்பூசி போடும் நாள் அறிவிக்கப்படும் என்று எழுதி ஒட்டப்பட்டு உள்ளது.
இதனால் அந்த மையத்தில் எப்போது தடுப்பூசி போடப்படும் என்பது தெரியாமல் பொதுமக்கள் குழப்பத்தில் உள்ளனர்.
தடுப்பூசி போட அந்த பகுதி மக்கள் ஆர்வமாக இருப்பதால் அந்த மையத்தை திறந்து அனைவருக்கும் தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.