கோவை
கோவை மாவட்டத்தில் முழு ஊரடங்கு விதிமுறைகளை மீறிய 611 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு 203 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
வாகனங்கள் பறிமுதல்
கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலையின் தீவிரத்தை தடுக்க தமிழகத்தில் ஒரு வாரம் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு கடை பிடிக்கப்பட்டு வருகிறது.
முழு ஊரடங்கு விதிகளை மீறுபவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதில், தேவையின்றி வெளியே சுற்றுபவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து வருகிறார்கள்.
கோவை மாநகரில் உக்கடம், காந்திபுரம் பீளமேடு, டவுன்ஹால், ஆர்எஸ்.புரம் உள்ளிட்ட பகுதிகளில் முழு ஊரடங்கு மீறியதாக 500 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. 100 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
611 பேர் மீது வழக்கு
இதேபோல், பெரியநாயக்கன்பாளையம், பேரூர், வால்பாறை, கருமத் தம்பட்டி, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட போலீஸ் நிலைய பகுதிகளில் ஊரடங்கு விதிகளை மீறியதாக ஒரே நாளில் 111 பேர் மீது தொற்று நோய் பரவல் தடுப்பு சட்டத்தில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ஊரடங்கு விதிகளை மீறியதாக கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் ஒரே நாளில் 611 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. 15 நான்கு சக்கர வாகனங்கள் உள்பட மொத்தம் 203 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.