520 வாகனங்கள் மூலம் காய்கறி விற்பனை

520 வாகனங்கள் மூலம் காய்கறி விற்பனை

Update: 2021-05-25 17:36 GMT
கோவை

கோவை நகரில் 520 வாகனங்கள் மூலம் வீதி, வீதியாக கொண்டு சென்று காய்கறி விற்பனை செய்யப்படுகிறது. இதற்கான அனுமதி சீட்டு பெற வியாபாரிகள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

காய்கறி விற்பனை

கோவையில் தளர்வுகள் இல்லாத ஊரடங்கால் அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்களின் நலன் கருதி 520 வாகனங்களில் வீதி வீதியாக சென்று காய்கறி விற்பனை செய்யப்படுகிறது. 

இதற்கான அனுமதி சீட்டு பெற எம்.ஜி.ஆர். மார்க்கெட்டில் வியாபாரிகள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

வாகனங்களில் காய்கறி விற்பனை செய்வது குறித்து மாநகராட்சி ஆணையாளர் குமாரவேல் பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது 

கோவை எம்.ஜி.ஆர். மார்க்கெட் உள்பட பல்வேறு மார்க்கெட்டுகளில் இருந்து கோவை நகர மக்களுக்கு காய்கறிகள் தட்டுப்பாடு இன்றியும், குறைந்தபட்ச விலையுடனும் கிடைக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

 வெளியூர்களில் இருந்து கோவைக்கு காய்கறிகள் வருவதில் பிரச்சினை இருந்தது. இது தொடர்பாக வெளியூர் வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி கோவை மார்க்கெட்டுக ளுக்கு காய்கறி கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வியாபாரிகளுக்கு அனுமதி

காய்கறியை விற்பனை செய்ய வியாபாரிகள், தள்ளுவண்டி வியாபாரிகளுக்கு மாநகராட்சி மூலம் உடனடியாக அனுமதி வழங்கப்படுகிறது. 

எம்.ஜி.ஆர். மார்க்கெட்டிலேயே அதிகாரி நியமிக்கப்பட்டு வாகனங்களிலும், தள்ளுவண்டிகளிலும் காய்கறி விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது.

கோவை மாநகராட்சியின் 70 வாகனங்கள், காய்கறி வியாபாரிகளின் 450 வாகனங்கள் என மொத்தம் 520 வாகனங்கள் மூலம் 100 வார்டுகளி லும் வீதி வீதியாக சென்று காய்கறி விற்பனை செய்ய நடவடிக் கை எடுக்கப்பட்டு வருகிறது. வரும் நாட்களில் காய்கறி விற்பனை வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்