எம்.ஆர்.சி. ராணுவ முகாம் சார்பில் ஏழை, எளியவர்களுக்கு உணவு பொட்டலங்கள்

எம்.ஆர்.சி. ராணுவ முகாம் சார்பில் ஏழை, எளியவர்களுக்கு உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டன.;

Update: 2021-05-25 17:26 GMT
குன்னூர்,

இந்திய ராணுவம் தேச பாதுகாப்பு பணி மட்டுமின்றி பல்வேறு தருணங்களில் ஏற்படும் பேரிடர் காலத்தில் தங்களை முழுமையாக ஈடுபடுத்தி வருகிறது. இந்த நிலையில் தற்போது கொரோனா 2-வது அலையை கட்டுபடுத்த தளர்வுகள் இல்லாத ஊரடங்கை அரசு அமல்படுத்தியுள்ளது. இதனால் ஏழை, எளிய மக்கள் வருமானமின்றி தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். 

இதனை தொடர்ந்து குன்னூர் அருகே உள்ள எம்.ஆர்.சி. ராணுவம் சார்பில் நீலகிரி மாவட்டத்தின் பின் தங்கியுள்ள பகுதிகளில் வருமானமின்றி வாழ்வாதாரத்தை இழந்துள்ள ஏழை, எளிய மக்களுக்கு சமூக இடைவெளியுடன் உணவு பொட்டலங்களை வழங்கினர். இந்த பணி தொடர்ந்து நடைபெறும் என்று ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்