முருகன் கோவில்களில் வைகாசி விசாக சிறப்பு பூஜைகள்

வைகாசி விசாகத்தையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் பக்தர்கள் இன்றி நடைபெற்றது.

Update: 2021-05-25 17:16 GMT
கூடலூர்,

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க கடும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. கோவில்கள் உள்பட வழிபாட்டு தலங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று வைகாசி விசாகத்தையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் குசுமகிரி, சந்தன மலை, பந்தலூர் உள்பட அனைத்து முருகன் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. கூடலூர் குசுமகிரி முருகன் கோவிலில் காலை 5 மணிக்கு கணபதி ஹோமம் நடைபெற்றது. தொடர்ந்த சுவாமிக்கு அபிஷேக அலங்கார பூஜைகள் நடைபெற்றது. பகல் 11 மணிக்கு பஞ்சாமிர்தம், பாலாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

ஆண்டு தோறும் வைகாசி விசாகத்தையொட்டி முருகன் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். ஆனால் இந்த ஆண்டு கொரோனா பரவல் எதிரொலி காரணமாக கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் முருகன் கோவில்கள் நேற்று பக்தர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

மேலும் செய்திகள்