அய்யன்கொல்லி அருகே குடியிருப்பை முற்றுகையிட்ட காட்டு யானைகள்

அய்யன்கொல்லி அருகே குடியிருப்பை காட்டு யானைகள் முற்றுகையிட்டன.

Update: 2021-05-25 17:07 GMT
பந்தலூர்,

பந்தலூர் தாலுகா அய்யன்கொல்லி அருகே அத்திசால், பாதிரிமூலா, மூலைக்கடை பகுதியில் காட்டுயானைகள் அடிக்கடி அட்டகாசம் செய்து வருகின்றன. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 10 காட்டு யானைகள் குட்டிகளுடன் பாதிரிமூலா பகுதிக்குள் புகுந்து குடியிருப்பை முற்றுகையிட்டன. 

இதனால் பொதுமக்கள் பீதியடைந்தனர். இதற்கிடையில் வீட்டைவிட்டு வெளியே வந்தவர்களை காட்டு யானைகள் துரத்தின.தொடர்ந்து அங்கிருந்து சென்ற யானைகள் யோகராஜ், மத்தாய் என்பவர்களுக்கு சொந்த தோட்டத்திற்குள் புகுந்து தென்னை, பாக்குஉள்ளிட்ட பயிர்களை மிதித்து சேதப்படுத்தின.

இதுகுறித்து அறிந்த சேரம்பாடி வனச்சரகர் ஆனந்தகுமார், வனக்காப்பாளர் ஜெயக்குமார் மற்றும் வனத்துறையினர் காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர். தொடர்ந்து காட்டு யானைகள் சாமியார் மலை அடிவார பகுதிக்கு சென்றன. தொடர்ந்து காட்டு யானைகளை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

காட்டு யானைகள் மீண்டும் குடியிருப்பு பகுதிக்குள் புகும் அபாயம் உள்ளதால், அவற்றை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வனத்துறையினருக்கு  கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்