மேலூர் அருகே மின்சாரம் தாக்கி பெண் பலி

மேலூர் அருகே மின்சாரம் தாக்கி பெண் பலியானார்.

Update: 2021-05-25 17:07 GMT
மேலூர்,

மேலூர் அருகே உள்ள இ.மலம்பட்டியை சேர்ந்த சேகர் என்பவரின் மனைவி சுந்தம்மாள்(வயது 45). இவர் கீழவளவில் ஆசைத்தம்பி என்பவரின் வீட்டு கட்டுமான வேலைக்கு சென்றுள்ளார். அங்கு மின்சார மோட்டாரை இயக்கி கட்டிட சுவற்றுக்கு தண்ணீர் தெளித்துள்ளார். அப்போது மின்சாரம் தாக்கி மேலூர் அரசு ஆல்பத்திரிக்கு கொண்டுவரும் வழியில் இறந்துபோனார். இதுகுறித்து கீழவளவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்