ஸ்ரீவைகுண்டம் பகுதியில் வாழைகள் சேதம்
ஸ்ரீவைகுண்டம் பகுதியில் வாழைகள் சேதம் அடைந்துள்ளன
ஸ்ரீவைகுண்டம்:
ஸ்ரீவைகுண்டம், கருங்குளம் பகுதியில் நேற்று மாலையிலிருந்து இரவு முழுவதும் பலத்த காற்று வீசியது. இந்த திடீர் காற்றால் அப்பகுதிகளில் குழைதள்ளிய நிலையில் இருந்த 2ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழைகள் சாய்ந்தன. இந்த வாழைகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.