ரெயிலில் வந்த 2 ஆயிரத்து 630 டன் ரேஷன் அரிசி
திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் உள்ள ரேஷன் கடைகளில் வினியோகம் செய்வதற்கு 2 ஆயிரத்து 630 டன் அரிசி மூட்டைகள் திண்டுக்கல்லுக்கு ரெயிலில் வந்தன.
திண்டுக்கல்:
தமிழகத்தில் ரேஷன்கடைகள் மூலம் மக்களுக்கு வினியோகிக்க தேவையான அளவு அரிசி இருப்பு வைக்கப்படுகிறது.
இந்த நிலையில் தெலுங்கானாவில் இருந்து திண்டுக்கல்லுக்கு நேற்று சரக்கு ரெயிலில் ரேஷன்அரிசி வந்தது.
இந்த ரெயிலில் மொத்தம் 2 ஆயிரத்து 630 டன் ரேஷன் புழுங்கல் அரிசி வந்தது. இதையடுத்து அவை திண்டுக்கல், தேனி மாவட்டங்களுக்கு தேவைக்கு ஏற்ப பிரிக்கப்பட்டு, லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.
இதில் திண்டுக்கல் மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட அரிசி, முருகபவனம் நுகர்பொருள் வாணிப கிடங்குக்கு அனுப்பி வைக்கப்பட்டது.