முக கவசம் அணியாத போலீஸ்காரருக்கு அபராதம்

தேனியில் முக கவசம் அணியாத போலீஸ்காரருக்கு போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி அபராதம் விதித்தார்.

Update: 2021-05-25 13:29 GMT
தேனி: 

தேனி அரண்மனைப்புதூர் விலக்கு பகுதியில் போலீசார் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். 

அப்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி அங்கு வந்து பாதுகாப்பு மற்றும் வாகன தணிக்கை பணிகளை ஆய்வு செய்தார். 

அவர் ஆய்வு செய்து கொண்டு இருந்தபோது, ஒரு மோட்டார் சைக்கிளில் ஆயுதப்படை போலீஸ்காரர் ஒருவர் வந்து கொண்டு இருந்தார். 


தலைக்கவசம் அணிந்து இருந்த போதிலும் அந்த போலீஸ்காரர் முக கவசம் அணியாமல் வந்தார். 

அதை கவனித்த போலீஸ் சூப்பிரண்டு, அந்த போலீஸ்காரர் வந்த வாகனத்தை நிறுத்த அங்கிருந்த போலீசாருக்கு உத்தரவிட்டார். 

பின்னர் அந்த போலீஸ்காரர் முக கவசம் அணியாததற்கு அவரை கண்டித்ததோடு, அவருக்கு அபராதம் விதிக்கவும் போலீசாருக்கு உத்தரவிட்டார். 

இதையடுத்து தேனி போலீசார் அந்த போலீஸ்காரருக்கு ரூ.200 அபராதம் விதித்தனர். 

மேலும் முக கவசம் அணியாமல் யார் சென்றாலும் அவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்