அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த 2 லாரிகள் பறிமுதல் - 4 பேர் கைது
அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த 2 லாரிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
வல்லம்,
தஞ்சை - திருச்சி சாலையில் உள்ள அய்யாசாமிபட்டி பிரிவு சாலை அருகே நேற்று செங்கிப்பட்டி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள தனியார் தொழிற்சாலை அருகே வந்த 2 லாரிகளை மறித்து சோதனை செய்ததில், அதில் அனுமதியின்றி மணல் ஏற்றி வந்தது தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டையை சேர்ந்த ஜெய்சங்கர் (வயது 30), ஈஸ்வரன் (26), தஞ்சை மாவட்டம் திருமலை சமுத்திரம் பகுதியை சேர்ந்த குழந்தை வேலு (45), திட்டை பகுதியை சேர்ந்த நாதன் (36) ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். மேலும் 2 லாரிகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.