போக்குவரத்து தொழிலாளர்களுக்கு தடுப்பூசி
திண்டுக்கல்லில் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நேற்று நடைபெற்றது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் நாகல்நகர் அரசு போக்குவரத்து கழக பணிமனையில், போக்குவரத்து தொழிலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நேற்று நடைபெற்றது.
இதற்கு அரசு போக்குவரத்து கழகத்தின் மண்டல பொதுமேலாளர் கணேசன் தலைமை தாங்கினார். திண்டுக்கல் மாநகர் நலஅலுவலர் லட்சியவர்ணா முன்னிலை வகித்தார்.
இதில் அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றும் அலுவலர்கள், பணியாளர்கள், டிரைவர்கள், கண்டக்டர்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் வந்து தடுப்பூசி போட்டனர்.
இதில் மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் செபாஸ்டியன், போக்குவரத்து கழக அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.