தரைப்பாலம் கட்டும் பணி தீவிரம்

கம்பம் போக்குவரத்து சிக்னல் முன்பு தரைப்பாலம் கட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

Update: 2021-05-25 12:27 GMT
கம்பம்:

கம்பம் போக்குவரத்து சிக்னல் முன்பு பழைய பஸ்நிலையம் நிலையம் சாலையையும், கம்பம்-தேனி பிரதான சாலையையும் இணைக்கும் சாலை சந்திப்பில் கழிவுநீர் செல்வதற்காக தரைப்பாலம் உள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பாலம் கட்டப்பட்டது. தற்போது மண்மேவி பாலம் உள்ளது. 

இதனால் மழைக்காலத்தில் அந்த வழியாக அதிகளவு மழைநீர் வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும். இதைக்கருத்தில் கொண்டு அந்த பாலத்தை இடித்து விட்டு, புதிதாக பாலம் கட்டுவதற்கு கம்பம் நகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது.

அதன்படி பாலம் கட்டுவதற்காக, நகர்ப்புற உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் போக்குவரத்து நெரிசல் காரணமாக பணிகள் நடைபெறுவதில் சிக்கல் இருந்து வந்தது. 

தற்போது ஊரடங்கு அமலில் இருப்பதால் வாகன போக்குவரத்து அடியோடு முடங்கி விட்டது. இதனால் பாலம் கட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. பொக்லைன் எந்திரத்தின் மூலம் பழைய காலம் தோண்டி அகற்றப்பட்டு, புதிதாக பாலம் கட்டும் பணி முழு வீச்சாக நடந்து வருகிறது.

மேலும் செய்திகள்