பாதுகாப்பு கவச உடை அணிந்து கலெக்டர் ஆய்வு
தற்காலிக கொரோனா சிகிச்சை மையங்களில் பாதுகாப்பு கவச உடை அணிந்து கலெக்டர் ஆய்வு செய்தார்.
தேனி:
தேனி மாவட்டம் ராஜதானி, ஓடைப்பட்டி, போடிதாசன்பட்டி பகுதிகளில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி நேற்று ஆய்வு செய்தார்.
ராஜதானி அரசு ஆரம்ப சுகாதார நிலையம், ஓடைப்பட்டி மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கொரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெறும் நோயாளிகளை அவர் சந்தித்து சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார்.
இதற்காக அவர் பாதுகாப்பு கவச உடை அணிந்து மையத்துக்குள் சென்றார். பின்னர் போடி தாசன்பட்டியில் நோய்கட்டுப்பாட்டு பகுதிகளை பார்வையிட்டு அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் தடுப்பு பணிகள் குறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்களுடன் கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின் போது ஊராட்சிகள் உதவி இயக்குனர் காளியப்பன், வட்டார மருத்துவ அலுவலர் இளங்கோவன் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.