போலீசாருக்கு கிருமி நாசினி, முக கவசம்
பழனியில் போலீசாருக்கு கிருமி நாசினி, முக கவசம் ஆகியவற்றை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளி பிரியா வழங்கினார்.
பழனி:
திண்டுக்கல் மாவட்ட போலீஸ் துணை சூப்பிரண்டு ரவளி பிரியா நேற்று பழனியில் ஆய்வு செய்தார்.
அப்போது பஸ் நிலையம் முன்பு பணியில் இருந்த போலீசாருக்கு முக கவசம், கிருமிநாசினி ஆகியவற்றை அவர் வழங்கினார்.
மேலும் போலீசாரை உற்சாகப்படுத்தும் வகையில் இனிப்பு, கார வகைகளை வழங்கினார்.
கொரோனா தொற்று ஏற்படாமல் இருப்பதற்கு போலீஸ்காரர்கள் பணி முடிந்து வீட்டிற்கு செல்லும் முன் போலீஸ் நிலையத்திற்கு சென்று கிருமி நாசினி மூலம் கைகளை சுத்தம் செய்ய வேண்டும்.
அங்கு உள்ள ஆவி பிடிக்கும் கருவியை பயன்படுத்தி ஆவி பிடிக்க வேண்டும். உடல்நிலை பாதிக்கப்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
அஜாக்கிரதையாக இருக்கக் கூடாது என்று போலீஸ் சூப்பிரண்டு அறிவுறுத்தினார்.