அச்சரப்பாக்கம் அருகே கார் கவிழ்ந்து 1½ வயது குழந்தை பலி - பெற்றோர் படுகாயம்

அச்சரப்பாக்கம் அருகே கார் கவிழ்ந்ததில் 1½ வயது குழந்தை சம்பவ இடத்திலேயே இறந்தது. பெற்றோர் பலத்த காயமடைந்தனர்.

Update: 2021-05-25 10:54 GMT
அச்சரப்பாக்கம்,

கோயம்புத்தூரிலிருந்து வினோத்குமார் (வயது 31) மற்றும் அவரது மனைவி மோனிஷா (26) ஆகியோர் 1½ வயது மகள் தனிஷ்காவுடன் நேற்று காரில் சென்னை சென்று கொண்டிருந்தனர். செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் அடுத்த தொழுப்பேடு மேம்பாலத்தில் சென்ற போது, காரின் டயர் வெடித்ததில் நிலைத்தடுமாறி தடுப்பு வேலியை உடைத்துக் கொண்டு சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படுகாயமடைந்த 1½ வயது குழந்தை மோனிஷா சம்பவ இடத்திலேயே இறந்தது.

தாய், தந்தை இருவரும் பலத்த காயமடைந்து மேல்மருவத்தூர் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவ இடத்திற்கு சென்ற அச்சரப்பாக்கம் போலீசார் இறந்த குழந்தை மோனிஷாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசுஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது சம்பந்தமாக அச்சரப்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் டி.எஸ்.சரவணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்