மண்டல கல்லூரி கல்வி முன்னாள் இணை இயக்குனர் கொரோனாவுக்கு பலி
சேலம்: மண்டல கல்லூரி கல்வி முன்னாள் இணை இயக்குனர் கொரோனாவுக்கு பலி;
சேலம்:
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி பகுதியை சேர்ந்தவர் சகுந்தலா (வயது 61). இவர் மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். மேலும் சேலம் ஆண்கள் அரசு கலை கல்லூரி முதல்வராகவும், பெண்கள் கல்லூரியில் வேதியல் துறை தலைவராகவும் பணியாற்றி உள்ளார். இந்த நிலையில் அவருக்கு கடந்த 2 வாரத்திற்கு முன்பு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் தெரியவந்தது. இதையடுத்து அவர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சகுந்தலா நேற்று பரிதாபமாக இறந்தார்.