கருமந்துறை மலைப்பகுதியில் சாராய ஊறல்கள் அழிப்பு

சாராய ஊறல்கள் அழிப்பு

Update: 2021-05-24 22:33 GMT
பெத்தநாயக்கன்பாளையம்:
கருமந்துறை மலைப்பகுதியில் சாராய ஊறல் போடப்பட்டு உள்ளதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து வனத்துறையினர் கருமந்துறை மலைப்பகுதியில் உள்ள பட்டிமேடு மற்றும் பட்டிமேடு தொடர்ச்சி காப்புகாடு, பட்டிமேடு பீட் உள்பட பல்வேறு இடங்களில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பட்டிமேடு தொடர்ச்சி பீட் கருங்கல் ஓடை பகுதியில் 3 பேரல்களில் சாராய ஊறல்கள் இருந்ததை கண்டுபிடித்தனர். இதைத்தொடர்ந்து அந்த சாராய ஊறல்களை வனத்துறையினர் அழித்தனர்.

மேலும் செய்திகள்