திருச்சியில் கொரோனாவுக்கு ஒரேநாளில் 22 பேர் பலி
திருச்சியில் கொரோனாவுக்கு ஒரேநாளில் 22 பேர் பலியாகினர்
திருச்சி
திருச்சி மாவட்டத்தில் தினமும் சராசரியாக ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். திருச்சி மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் மாவட்டத்தில் 13 பேர் பலியாகி இருந்தனர்.இந்தநிலையில் திருச்சியில் நேற்று ஒரேநாளில் கொரோனாவுக்கு 22 பேர் பலியாகியுள்ளனர். புதிதாக 1,268 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.